டைம் லூப் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானர் படமான ‘ஜாங்கோ’… வெளியானது அசத்தலான ட்ரெய்லர்!

சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சயின்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது.

தற்போது, தமிழில் உருவாகி கொண்டிருக்கும் டைம் லூப் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானர் படம் ‘ஜாங்கோ’. இந்த படத்தை இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்க, ஹீரோவாக சதீஷ் குமார் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் மிருணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரீஷ் பெராடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தினை ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சென் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது. இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.