ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த கங்கனா!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது.

தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா பிறந்த தினமான இன்று (பிப்ரவரி 24-ஆம் தேதி) இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் கங்கனா ரனாவத். படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.