ஜெயம் ரவி வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான “நீ தானா அவன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தனது ஆரம்ப கட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னணியில் இருக்கும் நடிகையாக இருப்பவர் இவர். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் கவனிக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் ரம்மி என்ற படத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் தக்க வைத்துக் கொண்டார்.

பின்பு காக்காமுட்டை, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த ‘கா.பே.ரனசிங்கம்’ என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் ‘பூமிகா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டு இந்த படம் ஒரு ஹாரர் த்ரில்லர் வகையறா என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ரதிந்திரன்.ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார். காடுகள் அழிக்கப்படுவது குறித்து இந்த திரைப்படம் இருக்கும் என்பது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிகிறது.

Share.