யார் அந்த கிரிக்கெட் பிளேயர் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பூமி . இந்த படம் நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமாக அமைந்தது . லட்சுமணன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியாகி இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு பூமி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெறவில்லை .

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது .மேலும் “ஜன கண மன ” மற்றும் அகிலன் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார் . அகிலன் படம் முழுக்க முழுக்க இந்திய பெருங்கடலில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

அகிலன் படத்தை தொடர்ந்து நடிகர் நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரசிகர்கள் பல முறை தன்னை விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் பயோபிக் படத்தில் நடிக்க தெரிவித்து இருக்கிறார்கள் . எனக்கும் யுவராஜ் பயோபிக் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் .

Share.