அக்டோபர் 21-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பூமி’ படத்தின் ‘கடைக்கண்ணாலே’ பாடல்… வைரலாகும் புது ப்ரோமோ!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் (அடங்க மறு, கோமாளி) சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், இயக்குநர் ரத்னகுமார் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு ‘பூமி’ படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தனர்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘தமிழன் என்று சொல்லடா’-வை தயாரிப்பு நிறுவனம் ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் ‘ஜெயம்’ ரவி ஃபேன்ஸுக்கு சூப்பரான பர்த்டே ட்ரீட்டாக அமைந்தது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை ‘ராக்ஸ்டார்’ அனிருத் பாடியுள்ளார். தற்போது, இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக்கான ‘கடைக்கண்ணாலே’-வை அக்டோபர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இன்று இப்பாடலின் புது ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறாராம்.

Share.