தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. முதல் படத்துலேயே தன் நடிப்பால் அசரடித்து, ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அந்த படம் தான் ‘ஜெயம்’. ‘ஜெயம்’ ஹிட்டானதும் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’ என்ற படத்தில் நடித்தார். இதுவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதும், ‘ஜெயம்’ ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், அடங்க மறு, கோமாளி, பூமி’ என படங்கள் குவிந்தது.
இப்போது ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, அஹமத்தின் ‘ஜன கண மன, இறைவன்’, கல்யாண கிருஷ்ணனின் ‘அகிலன்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்றுடன் (ஜூன் 21-ஆம் தேதி) ரவியின் முதல் படமான ‘ஜெயம்’ வெளியாகி 19 ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது, ‘ஜெயம்’ ரவி ட்விட்டரில் தனது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்கும், மீடியாவுக்கும் நன்றி தெரிவித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
#19YearsOfJayamravi 🙏🏼 pic.twitter.com/Obp9xerd89
— Jayam Ravi (@actor_jayamravi) June 21, 2022
Comments