அகிலன் படத்தின் டீஸர் வெளியானது !

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பூமி . இந்த படம் நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமாக அமைந்தது . லலட்சுமணன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியாகி இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு பூமி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெறவில்லை .

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது .மேலும் “ஜன கண மன ” என்கிற படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் ஜெயம் ரவி . மேலும் தற்போது அகிலன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் . அகிலன் படத்தை என். கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார் . சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார் .

முழுக்க முழுக்க இந்திய பெருங்கடலில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது . மேலும் படத்தில் இருந்து சில கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு சில வாரங்களுக்கு முன் வெளியீட்டு இருந்தது. இந்நிலையில் அகிலன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Share.