“விஜய் சாரின் ‘மாஸ்டர்’ தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது”… ‘RRR’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகிழ்ச்சியுடன் சொன்ன ஜூனியர் என்.டி.ஆர்!

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட மாஸான ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தை வருகிற ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆரிடம் “நீங்க பல வருடங்களாக டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வர்றீங்க, நாங்க ஆதரவு கொடுக்கிறோம். இப்போ எங்க கோலிவுட் ஹீரோக்களோட படங்கள் அங்க டோலிவுட்ல டப்பாகி வந்துட்டு இருக்கு.

மேலும், தனுஷ், விஜய் சார், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரடி தெலுங்கு படங்கள்ல நடிக்கப்போறாங்க. அவங்களோட போட்டியை வந்து நீங்க எப்படி சமாளிக்கப்போறீங்க? அவங்களோட வரவேற்பை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜூனியர் என்.டி.ஆர் “நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்களை நாங்கள் எங்களுக்கு போட்டியாக பார்க்கவில்லை, இதனை ஆரோக்கியமாக பார்க்கிறோம். சமீபத்தில், தெலுங்கில் விஜய் சாரின் ‘மாஸ்டர்’ படமும், தனுஷ் சாரின் படங்களும் சூப்பர் ஹிட்டானது” என்று கூறியுள்ளார்.

Share.