ஜோதிகா – சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

கெஸ்ட் ரோலில் வந்த முதல் படமான ‘வாலி’-யிலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தவர் நடிகை ஜோதிகா. அதன் பிறகு அவரின் கால்ஷீட் டைரியில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும்’ என படங்கள் குவிந்தது. பின், பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

அதன் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியானார். ’36 வயதினிலே’ படம் ஹிட்டானதும் மறுபடியும் ஜோதிகா செம பிஸியான நடிகையாக மாறி விட்டார். தற்போது, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரவணன் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி நடித்துள்ளனர். இதனை ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தை வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Share.