“பிரதமர் மோடியை விமர்சனம் பண்றவங்க எல்லாருமே குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்”… கே.பாக்யராஜ் சர்ச்சை பேச்சு!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.பாக்யராஜ். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதுடன், ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் பாக்யராஜ்.

இப்போது மீண்டும் ஹீரோவாக பாக்யராஜ் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். ‘3.6.9’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை சிவ மாதவ் இயக்கியுள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ள இதற்கு மாரீஸ்வரன் மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.ஸ்ரீநாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 20-ஆம் தேதி) ‘பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா 2022’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் பேசுகையில் “பிரதமர் மோடியை விமர்சனம் பண்றவங்க எல்லாருமே குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்-ன்னு நினைச்சுக்க சொல்லுங்க” என்று கூறியுள்ளார். இவர் பேசிய விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share.