கே. ஜி. எஃப் நிகழ்த்த போகும் சாதனை

நடிகர் யாஷ் நடிப்புல பிரஷாந்த் நீல் இயக்கத்துல கடந்த 2018ம் வெளியாகி இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான்
கே. ஜி. எஃப் 1.

தமிழ்நாட்டுல இந்த படத்த நடிகர் விஷாலின்
“விஷால் ஃபிலிம் ஃபாக்டரி” மூலம் வெளியிட்டார். யாரும் எதிர்பாராத விதமா இந்த படம் தமிழ்நாட்டுல மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த நிலையில இந்த படத்தோட இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகுகிறது. படத்தோட டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கே. ஜி. எஃப் படத்தோட இரண்டாம் பாகம் கீரிஸ் நாட்டுல வெளியாக போவதா படக்குழு அறிவிச்சியிருக்காங்க.
தென்னிந்தியாவிலிருந்து வெளியாகுற முதல் படம் என்ற பெருமையுடன் இந்த படம் கீரிஸ் நாட்டுல வெளியாக இருக்கு.

“பாலிவுட்பீட்ஸ்இத்தாலி “என்கிற நிறுவனம் தான் கீரிஸ் நாட்டுல இந்த படத்த வெளியிடுறாங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என 5 மொழிகள் இந்த படத்த கொண்டாட கீரிஸ் நாட்டு ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கே. ஜி. எஃப் படத்தோட இந்த பிரமாண்டமான ரீலிஸ் காரணமா உலகம் முழுக்க வசூல் வேட்டை நடத்த ராக்கி பாய் தயாரிக்கிவிட்டார் என்று தான் சொல்லனும். இந்த படம் வெளியான சில நாட்களிலே பல இந்திய படங்களோட வசூல் சாதைனையை கே. ஜி. எஃப் 2
நிகழ்த்தும் இந்திய முழுவதும் உள்ள சினிமா துறையை சேர்ந்தவங்க நம்புறாங்க.

Share.