காலா படத்தின் வசூல் எத்தனை கோடி ?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் காலா . இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து இருந்தார் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . நானா பட்னேக்கர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . ஈஸ்வரி ராவ் , மணிகண்டன் , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் .

110 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தது . தாராவி ஊர் போன்று தத்ரூபமாக ஒரு செட் போட்டு அதில் படத்தை எடுத்து இருந்தனர் .வித்யா பாலன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை . இதற்கு பதில் ஹூமா குரேஷி இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் .

காலா படம் திரைக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்தது . ஆனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெறவில்லை .ரஜினி ரசிகர்கள் பலபேருக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்துள்ளது . 110 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் மொத்தமாக 60 முதல் 70 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து தோல்வி படமாக அமைந்தது .

Share.