ஓ.டி.டியில் வெளியானது காத்து வாக்குல ரெண்டு காதல் !

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார் . லலித் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இசையமைப்பாளர் அனிருத் இது 25வது படமாக அமைந்துள்ளது .

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது . மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்பு மார்ச் மாதம் முழுவதமாக நிறைவடைந்தது . கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது .படம் வெளியான பிறகு இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பெரும்பாலான ரசிகர்கள் நடிகை சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர் .

இந்நிலையில் இந்த படத்தின் ஓ.டி.டியில் இன்று வெளியாகி இருக்கிறது . டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகி உள்ளது . திரையரங்கில் இந்த படத்தை பார்க்காத பலர் இந்த படத்தை பலர் பார்த்து வருகின்றனர் . டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .

Share.