சூர்யா நடிப்பில் வெளியான காதலே நிம்மதி படத்தின் வசூல் எத்தனை லட்சம் தெரியுமா ?

காதலே நிம்மதி 1998 ஆம் ஆண்டு இந்திரன் இயக்கிய இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யா, முரளி, ஜீவிதா சர்மா, சங்கீதா ஆகியோர் நடித்து இருந்தனர் . படத்தில் ராதிகா, மணிவண்ணன் மற்றும் நாசர் ஆகியோரும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்து இருந்தனர் . தேவா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

ராஜன் எழுதி இயக்கிய காதலே நிம்மதி என்ற காதல் கதையை உருவாக்கப் போவதாக ‘சிவசக்தி’ பாண்டியன் அறிவித்தார். ‘சிவசக்தி’ பாண்டியன் அவருக்கு இந்திரன் என்ற மேடைப் பெயரை வழங்கினார். ஜீன்ஸ் படத்தின் (1998) வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் அவருக்குப் பதிலாக சூர்யா அந்த படத்தில் நடித்தார் .

இந்த படத்தில் இடம்பெற்ற வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என்கிற பாடல் அப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹிட் பாடல் . நடிகர் முரளி இந்த பாடலில் சூர்யாவுடன் நடித்து இருப்பார் . இந்நிலையில் 25 லட்சம் ரூபாயில் உருவான இந்த படம் 28 லட்சம் வசூல் செய்துள்ளது .

Share.