கைதி படத்தின் ஹிந்தி உரிமம் எத்தனை கோடி தெரியுமா ?

கார்த்தி நடிப்பில் 2019வது ஆண்டு வெளியான படம் கைதி. இந்த படத்தை இயக்கி இருந்தவர் லோகேஷ் கனகராஜ். எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆக்ஷன் படமாக உருவாகி இருந்ததால் இளம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இந்த படத்திற்கு பிறகு கைதி படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதன் பிறகு லோகேஷ் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தை எடுத்து முடித்தார்.

விக்ரம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. முன்னதாக விக்ரம் படம் வெளியாகுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் இயக்குனர் லோகேஷ் அதில் லோகேஷ் கைதி படத்தை திரும்ப பார்த்துவிட்டு வாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

விக்ரம் மற்றும் கைதி படத்தை வைத்து ஒரு யூனிவெர்ஸ் உருவாக்கி உள்ளார் லோகேஷ் .இந்நிலையில் பெரிய அளவில் வெற்றி பெற்ற கைதி படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமத்தை 4 கோடிக்கு விற்று உள்ளது படக்குழு .

Share.