‘கைதி’ பட நடிகர் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வந்தவர் அருண் அலெக்சாண்டர். ‘அவதார், 2012, டாய் ஸ்டோரி, அக்வாமேன், தோர், மென் இன் ப்ளேக்’ போன்ற பல ஹாலிவுட் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் அருண் அலெக்சாண்டர். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம், கைதி’ ஆகிய இரண்டு படங்களிலும் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’, ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’, கதிரின் ‘ஜடா’ ஆகிய படங்களிலும் அருண் அலெக்சாண்டர் நடித்திருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களிலும் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இப்போது நடிகர் அருண் அலெக்சாண்டர் நடிப்பில் ‘தளபதி’ விஜய்யின் ‘மாஸ்டர்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 28-ஆம் தேதி) நடிகர் அருண் அலெக்சாண்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.