மஞ்ச காட்டு மைனாவாக மாறிய காஜல் !

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் . இவர் 2008 -ஆம் ஆண்டு வெளியான பழனி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இதன் பிறகு சில படங்களில் இவர் நடித்து இருந்தாலும் காஜல் அகர்வாலை ரசிகர்களிடம் பிரபலமாக்கிய படம் மகதீரா . தெலுங்கு திரை உலகில் இந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு மிக பெரிய வெற்றி அடைந்த படமாக நான் மகான் அல்ல படம் அமைந்தது .

அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார் . இந்நிலையில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நின்ற பிறகு காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்து உள்ளது . இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது . இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்து இருந்தார் .

நடிகை காஜல் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவார் . அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது .

Share.