நடிகை காஜல் அகர்வாலின் திருமண செய்தி-மணமகன் இவர்தான்!!

இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.

தற்போது இவர் தன்னுடைய திருமண செய்து குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இவர்தான் தன் மணமகன் என்றும் குறிப்பிட்டுள்ளார். கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை மணக்கவுள்ளார் காஜல் அகர்வால். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

Share.