சிம்புவின் ‘மாநாடு’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் கல்யாணி ப்ரியதர்ஷன்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் ‘மெஹரஸைலா’ பாடல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

Kalyani's Insta Story About Str's Maanaadu (2)

இப்படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்கிறார்கள். தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் தனது காட்சிகளுக்கு நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் டப்பிங் பேச ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை கல்யாணியே இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share.