‘வேட்டையாடு விளையாடு’ பார்ட் 2-வின் அப்டேட் கொடுத்த கெளதம் மேனன்… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள்.

கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 3’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். அப்போது கமல் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் பார்ட் 2 குறித்து பேசுகையில் “இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் கெளதம் மேனனிடம் ஸ்க்ரிப்ட் கேட்டேன். இன்னும் வரவில்லை” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கெளதம் மேனன் “எழுத்தாளர் ஜெயமோகன் சார் ‘வேட்டையாடு விளையாடு’ பார்ட் 2-வுக்கான ஸ்க்ரிப்ட்டை எழுதிட்டு இருக்காரு. சீக்கிரமே வரும் சார்” என்று கூறினார். கமல் – கெளதம் மேனன் கூட்டணியில் 2006-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Share.