கமலுடன் நேருக்கு நேர் மோத இருக்கும் சூர்யா !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா .ரஞ்சித்,நடிகர் சிலம்பரசன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை நடிகர் கமலுடன் இணைந்து வெளியிடுகிறார்.

நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்தனர் .

இந்நிலையில் கேன்ஸ் விழாவில் பங்கேற்க நடிகர் கமல் சென்றுள்ளார் .அங்கு நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்து இருப்பது பற்றி கமலிடம் கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த கமல் நடிகர் சூர்யா நம்பமுடியாத கடைசி நிமிட தோற்றத்தில் நடித்து இருக்கிறார் அது கதையை மேலும் நகர்த்தும் என்றும் அது விக்ரம் படத்தின் மூன்றாவது பாகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் .

இதன் மூலம் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யாவும் கமலும் நேருக்கு நேர் மோத இருப்பது உறுதியாகி இருக்கிறது .

Share.