“எது எல்லை, எது வரம்பு என்பதை போட்டியாளர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்”… கமல் பேசும் ப்ரோமோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் “வெளியே புயலும் மழையும் ஓய்ந்த சாயல் தெரிகிறது. வீட்டுக்குள் புயல் சின்னங்கள் உருவாகியிருக்கின்றன. பொம்மைகளை வைத்து விளையாடச் சொன்ன ஒரே காரணத்திற்காக இவ்வளவு குழந்தைத்தனமாக மாற வேண்டியதில்லை. இப்போது இவர்களுடைய விளையாட்டு, மல்யுத்தத்தை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. எது எல்லை, எது வரம்பு என்பதை இவர்களுக்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். அதை இன்று செய்வோம்” என்று பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.