ரோலக்ஸ்க்கு ரோலக்ஸ் வாங்கி கொடுத்த கமல் !

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

கடந்த வாரம் படம் வெளியான அன்றே சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேகக் காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டினர். அதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தியேட்டர்களில் படத்தைப் பார்த்தார்கள்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கார் பரிசாக அளித்தார் . இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு நடிகர் கமல் ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.


அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இதனை நடிகர் சூர்யா இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

Share.