மீண்டும் ஆரம்பமானது ஷங்கரின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்… கொண்டாட்டத்தில் கமல்ஹாசனின் ரசிகர்கள்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். ரஜினியின் ‘2.0’ படத்துக்கு பிறகு இவர் இயக்கத்தில் ரெடியாகி வந்த படம் ‘இந்தியன் 2’. இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க சென்று விட்டார்.

தற்போது, ‘இந்தியன் 2’ படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து இன்று (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) முதல் மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் ஷங்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இப்படத்தில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

Share.