‘விக்ரம்’ படத்தை ஆடியன்ஸுடன் பார்க்க திரையரங்கிற்கு சென்ற கமல் ஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ இன்று (ஜூன் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இருவரும் மிரட்டலான வில்லன் ரோல்களில் நடித்துள்ளார்கள். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், செம்பன் வினோத் ஜோஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்துள்ளார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படத்தை ஆடியன்ஸுடன் பார்க்க சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கிற்கு கமல் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.