கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படம் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’யில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

மேலும், கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்துள்ளார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி,படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. படத்தை வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Share.