கண்ணாடி அறையில் நிஷா, கன்ஃபஷன் ரூமில் ஜித்தன் ரமேஷ்… கமல் பேசும் ‘பிக் பாஸ் 4’ ப்ரோமோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கமல் ஹவுஸ்மேட்ஸிடம் “இப்போ ஒரு boring performer-அ நீங்க choose பண்ணுங்க” என்று சொல்கிறார். பின், அனைவரும் நிஷாவின் பெயரை சொல்கிறார்கள்.

அதற்கு கமல் “so அந்த boring performer என்ன செய்யணுமோ, அதை அவங்க செய்யணும் இல்லையா” என்று சொல்கிறார். பின், நிஷாவை ஓய்வு எடுக்கும் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டுகிறார் ரியோ. அதன் பிறகு கமல் “இந்த வாரம் இருவர். சோமசேகர் நீங்க எழுந்திருச்சு store room-ல போய் வெயிட் பண்ணுங்க. ரமேஷ் நீங்க கன்ஃபஷன் ரூம்ல வெயிட் பண்ணுங்க” என்று சொல்கிறார். அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும் கமல் “இதில் வெளியேற்றப்படுபவர் என்னை இந்த மேடையில் வந்து சந்திப்பார்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.