கமல் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் விக்ரம்… பிரபல OTT தளத்தில் ரிலீஸாகிறதா?

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, ஜீத்து ஜோசப்பின் ‘பாபநாசம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் இரண்டாவது ஷெடியூல் ஷூட்டிங் காரைக்குடியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர்.

மேலும், கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராமும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பிக் பாஸ் 4’ புகழ் ஷிவானி நாராயணனும் நடிக்கின்றனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது, இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஸ்டார் இந்தியா’ நிறுவனம் (சேட்டிலைட் – விஜய் டிவி, டிஜிட்டல் – டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்) கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், படம் முதலில் திரையரங்குகளில் தான் ரிலீஸாகுமாம், அதன் பிறகே ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் வெளியாகுமாம்.

Share.