ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… படக்குழுவினரை பாராட்டிய ‘உலக நாயகன்’!

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

பா.இரஞ்சித் இயக்கியுள்ள புதிய படமான ‘சார்பட்டா பரம்பரை’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, சந்தோஷ் பிரதாப், கலையரசன், ஜான் விஜய், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், மாறன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

குத்துச் சண்டை வீரராக ஆர்யா வலம் வந்த இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினை பார்த்த டாப் ஹீரோவான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ‘சார்பட்டா பரம்பரை’ டீமை பாராட்டியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.