10 வித்தியாசமான வேடங்கள்… #13YearsOfDasavathaaram குறித்து கமலின் சுவாரஸ்ய பதிவு

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2008-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் ‘தசாவதாரம்’. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் 10 ரோல்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் மல்லிகா ஷெராவத், ஜெய பிரதா, நெப்போலியன், ரகுராம், நாகேஷ், கே.ஆர்.விஜயா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நேற்றுடன் (ஜூன் 13-ஆம் தேதி) இந்த படம் வெளி வந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டதாம். இதனால் கமலின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#13YearsOfDasavathaaram’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது, நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த படம் பற்றி இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.


Share.