கமல் இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான ‘விருமாண்டி’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
April 20, 2022 / 04:38 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.
பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடித்துள்ளனர். படத்தை வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
கமல் ஹாசன் நடித்து, இயக்கி 2004-ஆம் ஆண்டு தமிழில் ரிலீஸான படம் ‘விருமாண்டி’. இந்த படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, நெப்போலியன், நாசர், ரோகினி, ஷண்முகராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை கமல் ஹாசனே தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரித்திருந்தார். இந்த படம் உலக அளவில் ரூ.40.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.