மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகர்… அவரது ஆசையை நிறைவேற்றிய ‘உலக நாயகன்’!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் – ஆண்டனி வர்கீஸ் முக்கிய ரோல்களிலும், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பவர்ஃபுல்லான வில்லன் ரோலிலும் நடிக்க உள்ளனர்.

Kamal's Zoom Call With Fan Battling Brain Cancer1

Kamal’s Zoom Call With Fan Battling Brain Cancer1

மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கனடாவில் உள்ள தனது தீவிர ரசிகர் சாகேத் மூளைப் புற்றுநோயால் (stage 3) பாதிக்கப்பட்டதையும், அவர் தன்னுடன் பேச விரும்பியதையும் தெரிந்துகொண்ட நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் zoom call-யில் பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.