கமல் – லோகேஷ் காம்போவில் ‘விக்ரம்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் கன்னட நடிகர்!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க உள்ளனர்.

Kannada Actor To Play Villain Role In Kamal's Vikram1

மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் என்றும், இன்னொரு வில்லன் ரோலில் நடிக்க கன்னட மொழியில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Share.