அடுத்த வாரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகும் கார்த்தி – தனுஷ் படங்கள்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.

அதனை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்யவே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது, திரையரங்குகளில் அடுத்த வாரம் வெளியாகப்போகும் இரண்டு பழைய தமிழ் படங்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

பாப்புலர் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய இரண்டு படங்களும் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி தியேட்டரில் ரீ-ரிலீஸாகப்போகிறது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். ‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

Share.