கார்த்தி – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கப்போகும் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பார்ட் 1 வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும், ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், கார்த்தி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கவுள்ளாராம். இதில் மிக முக்கிய ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Share.