விஜயகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண கார்த்திக்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ‘நவரச நாயகன்’ கார்த்திக். அதன் பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கார்த்திக், மீண்டும் ரீ-என்ட்ரியாகி அருண் விஜய்யின் ‘மாஞ்சா வேலு’, விக்ரமின் ‘ராவணன்’, தனுஷின் ‘அனேகன்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, மகன் கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’ ஆகிய படங்களில் நடித்தார்.

இப்போது, 60 வயதான கார்த்திக் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் டி.எம்.ஜெயமுருகன். இதில் மிக முக்கிய ரோல்களில் சுகன்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜான் விஜய், அபிதா மற்றும் பலர் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இது தவிர பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார் கார்த்திக். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2004-யில் ரிலீஸான தமிழ் படம் ‘எங்கள் அண்ணா’. விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்திக் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் பிரபு தேவா நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சித்திக்கின் முதல் சாய்ஸாக இருந்தது கார்த்திக் தானாம். பின், சில காரணங்களால் கார்த்திக்கால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.