டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் என்ட்ரியாகப்போகும் கார்த்தி… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது. ஆனால், கார்த்திக்கு அமைந்தது. அது தான் ‘பருத்திவீரன்’ படம். இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார்.

‘பருத்திவீரன்’ ஹிட்டிற்கு பிறகு கார்த்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி’ என படங்கள் குவிந்தது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் கார்த்தி. இப்போது, கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சுல்தான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ஏற்கனவே, ‘சுல்தான்’ படத்தின் 90% ஷூட்டிங் முடிந்து விட்டதாம். மேலும், இதுவரை எடுத்த அனைத்து காட்சிகளின் எடிட்டிங் பணியும் நிறைவு பெற்றதாம். இன்னும் 10 நாட்களின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸ் இருக்கிறதாம். தற்போது, இந்த படத்தை OTT தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம்.

Share.