கார்த்தி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘கைதி’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தின் ரிலீஸுக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில் தான் இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கைதி’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் நரேன், அர்ஜுன் தாஸ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘டில்லி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.