பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’… கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம்.

Karthi's Sardar Shooting Plan1

மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், சங்கி பாண்டே, முரளி ஷர்மா, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. பின், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. தற்போது, ‘சர்தார்’ படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஜூலை மாதம் 10-ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.