கார்த்தி – அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘விருமன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘விருமன்’ படம் இன்று (ஆகஸ்ட் 12-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா இயக்கியுள்ளார். ஏற்கனவே, இயக்குநர் முத்தையா – கார்த்தி காம்போவில் ரிலீஸான ‘கொம்பன்’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘விருமன்’ படத்தை கார்த்தியின் அண்ணனும், முன்னணி ஹீரோவுமான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், கருணாஸ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.