விருமன் படம் எப்பொழுது வெளியாகும் ?

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது .

மேலும் கஞ்சா பூ கண்ணால என்கிற பாடலின் ப்ரோமோவும் வெளியானது . இந்நிலையில் விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை 2டி நிறுவனம் அறிவித்துள்ளது .வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் விருமன் என்று தெரிவித்துள்ளது 2டி நிறுவனம் . இதனால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் . மேலும் கார்த்தி நடித்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் இறுதியில் வெளியாக இருக்கிறது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி சார்த்தர் படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் .கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் . சர்தார் படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது . எனவே இந்த வருடத்தில் மட்டும் நடிகர் கார்த்தியின் மூன்று படங்கள் திரைக்கு வர இருக்கிறது .

Share.