சித்தப்பு சரவணனை வேண்டாம் என்று சொன்னாரா கார்த்தி ?

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

மேலும் கஞ்சா பூ கண்ணால, மதுர வீரன் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .முதலில் இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருந்தது . ஆனால் வேறு சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வெளியிடப்பட்டது . இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக நடித்து இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளார் முதலில் இயக்குனர் முத்தையா அந்த பாத்திரத்தில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளார் ஆனால் நடிகர் கார்த்தி சரவணன் வேண்டாம் என்று கூறியுள்ளார் அதற்கு காரணம் சரவணன் கார்த்தியுடன் பருத்திவீரன் நடித்து இருந்தார். அது மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருந்தது . அதனால் ரசிகர்களில் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்ற காரணத்தினால் சரவணனை இந்த படத்தில் நடிக்க வைக்க கார்த்தி சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது .

Share.