சேலையில் அழகு தேவதையாக ‘கருப்பன்’ பட ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தன்யா ரவிச்சந்திரன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சசிக்குமாருடன் தான். அது தான் ‘பலே வெள்ளையத் தேவா’. இந்த படத்தை இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கியிருந்தார். ‘பலே வெள்ளையத் தேவா’ படத்துக்கு பிறகு நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பிருந்தாவனம், கருப்பன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இதுவரை நடித்த மூன்று படங்களிலுமே தன்யா ரவிச்சந்திரனின் நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது. இப்போது, தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் சிபிராஜின் ‘மாயோன்’, அதர்வா – சாம் ஆண்டன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இது தவிர ‘ராஜ விக்ரமார்க்கா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் தன்யா. இது தான் இவர் தெலுங்கு மொழியில் அறிமுகமாகும் முதல் படமாம். இந்நிலையில், தன்யா ரவிச்சந்திரன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

6

Share.