‘பிக் பாஸ் 3’யில் கலந்து கொண்டதற்கே இன்னும் சம்பளம் தரவில்லை… சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது . சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான ஏழு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது. நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த ஏழு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நடிகை ரேகா, நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், நடிகை கேப்ரில்லா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண்டியன், தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகர் ரியோ ராஜ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய 13 பிரபலங்கள் கலந்து கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ சீசன் 3-யில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி ட்விட்டரில் “நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, ஒரு வருடத்திற்கு மேலாக எனது சம்பளத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கும் விஜய் டிவிக்கு… நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். உங்களது பொய்யான வாக்குறுதிகளை நான் நம்பவில்லை. அதேபோல், உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவேவில்லை” என்று கூறியுள்ளார்.

Share.