தனுஷிற்கு நடிக்க தெரியுமா என்று கேட்ட கஸ்தூரி ராஜா ?

என் ராசாவின் மனசிலே என்கிற படம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா . ஆத்தா உன் கோயிலிலே , சோலையம்மா , தாய் மனசு , எட்டுப்பட்டி ராசா போன்ற படங்களை இயக்கி உள்ளார் . இவருக்கு விமலாகீதா , கார்த்திகா தேவி ,செல்வராகவன் ,தனுஷ் என்று நான்கு பிள்ளைகள்.இதில் செல்வராகவனை இயக்குனராகவும் , தனுஷை நடிகராகவும் அறிமுகம் செய்து வைத்தவர் கஸ்தூரி ராஜா.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது .இது தொடர்பாக நேற்று ஒரு அறிக்கையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார் தனுஷ் . இந்நிலையில் தனுஷின் தந்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் பேசி உள்ளார் . அதில் நடிகர் தனுஷின் ஆரம்ப காலகட்டத்தில் அவரது நடிப்பை நான் பாராட்டியது இல்லை. அவர் நடிப்பில் பல குற்றங்களை மட்டும் கண்டுபிடித்து சொல்லுவேன் என்றும் தனுஷிற்கு நடிப்பு வராது என்றும் நினைத்துக்கொண்டு இருந்தேன் .

ஆனால் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் மருத்துவமனையில் ஒரு சீனில் வில்லனிடம் ” என்னை போடுடா என்று தனுஷ் வித்தியாசமான முகபாவனை மற்றும் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதை பார்த்த பிறகு என்னடா உனக்கு நடிக்க வருமா , புதுசா பண்ற என்று கேட்டேன் . அந்த படத்திற்கு பிறகு தான் தனுஷை பாராட்டினேன் என்று கூறியுள்ளார் .

Share.