கீர்த்தி பாண்டியனின் சர்வைவல் த்ரில்லர் படமான ‘அன்பிற்கினியாள்’… ட்ரெய்லரை ஷேரிட்ட கார்த்தி!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மலையாள திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஹெலன்’. இந்த படத்தை இயக்குநர் மதுக்குட்டி ஸேவியர் இயக்கியிருந்தார். இதில் அன்னா பென், லால், நோபல் பாபு தாமஸ், அஜு வர்கீஸ், ரோனி டேவிட் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை ‘A&P க்ரூப்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியது. இதில் ஹீரோயினாக ‘தும்பா’ படம் மூலம் ஃபேமஸான கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

மேலும், முக்கிய ரோல்களில் அருண் பாண்டியன், பிரவீன், ரவிந்தரா, பூபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்கி கொண்டிருக்கிறார். ‘அன்பிற்கினியாள்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சர்வைவல் த்ரில்லர் ஜானர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது, படத்தின் ட்ரெய்லரை டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தி ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.