செல்வராகவனின் பர்த்டே… கீர்த்தி சுரேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் என்ன தெரியுமா?

ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதில் நடித்துள்ள முன்னணி ஹீரோ அல்லது அப்படத்தை இயக்கியுள்ள முன்னணி இயக்குநரால் அதிகமாக இருக்கும். இவை இரண்டுமே இல்லாமல் ஒரு சிறிய பட்ஜெட் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த படம் தான் ‘ராக்கி’. இது தான் இதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு முதல் படம்.

இப்படம் தயாராகி வெளியீட்டிற்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான ‘சாணிக் காயிதம்’-யில் பிஸியாகி விட்டார் அருண் மாதேஸ்வரன். இதில் இயக்குநர் செல்வராகவன் – நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இன்று (மார்ச் 5-ஆம் தேதி) இயக்குநரும், நடிகருமான செல்வராகவனுக்கு பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, ‘சாணிக் காயிதம்’ டீம் சார்பில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், படத்தின் மிரட்டலான புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.