கீர்த்தியின் கார்ஜியஸ் கிளிக்ஸ் !

இது என்ன மாயம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாணக்காயிதம் .இந்த படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன் . செல்வராகவன் இந்த படத்தில் நடித்து இருந்தார் . படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
மேலும் “சர்க்காரு வாரி பாட்டா ” என்கிற தெலுங்கு படமும் இவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது .இந்த படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .

இந்த படங்களை தொடர்ந்து வாஷி ,மாமன்னன் , தசரா ,போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் . அதில் மாமன்னன் என்ற படம் மட்டும் தமிழ் படம் . மாமன்னன் படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இதனால் இந்த படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்துள்ளது. . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர் .

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார் . இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share.