மின்னல் வேகத்தில் யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ்!

2015ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பிரபல நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 2000 ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானாசேர்ந்தகூட்டம், விக்ரமுடன் சாமி2, விஷாலுடன் சண்டக்கோழி 2, மீண்டும் விஜய்யுடன் சர்க்கார் போன்ற முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

தற்போது அறிமுக இயக்குனரான ஈஷாவர் கார்த்திக் இயக்கத்தில் “பெண்குயின்” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது.

லாக்டவுனில் தனது நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது 150 சூரிய நமஸ்காரங்களை ஒரே வீடியோவில் மின்னல் வேகத்தில் செய்து அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை பதிவிட்டு 200 சூரியநமஸ்காரம் களை ஒரே நேரத்தில் செய்வது தான் இலக்கு என்று அதில் பதிவிட்டுள்ளார். இப்படி சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலில் உள்ள அனைத்து சக்கரங்களும் ஒரே நேரத்தில் புத்துணர்வு ஊட்டும் என்றும் அதில் அவர் கூறியுள்ளார். மேலும் இதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் நடிப்பில் “குட் லக் சகி” மற்றும் “மிஸ் இந்தியா” ஆகிய திரைப்படங்கள் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள “அண்ணாத்த” திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Share.