கீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ என்ற தமிழ் படம் OTT-யில் வெளி வந்தது.

தற்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘குட் லக் சகி’ என்ற படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் ரெடியாகி கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இயக்கி வருகிறார். இதில் முக்கிய ரோல்களில் ஆதி, ஜெகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இதற்கு சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை சுதீர் சந்திரா பதிரி தனது ‘வொர்த் ஏ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை இன்று (ஆகஸ்ட் 15-ஆம் தேதி) நடிகர்கள் விஜய் சேதுபதி (தமிழ் வெர்ஷன்), பிரபாஸ் (தெலுங்கு வெர்ஷன்), ப்ரித்விராஜ் (மலையாள வெர்ஷன்) ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Share.